/* */

தென்காசி அருகே கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம்

தென்காசி அருகே கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி அருகே கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம்
X

கால்நடைகளுக்கான சிகிச்சை  முகாமினை மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரி கிராமத்தில் நடந்த கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கினங்க கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி, குறும்பலாப்பேரி கிராமத்தில் கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

தென்காசி கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் மகேஷ்வரி வரவேற்றார். திருநெல்வேலி நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர். ஜான் சுபாஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் காவேரி சீனித்துரை மற்றும் குலசேகரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாலையம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கால்நடை மருத்துவர் கிருஷ்ணமணி தலைமையில் கால்நடை மருத்துவர்கள் பாலமுருகன், ரமேஷ், சிவக்குமார், ரமாதேவி, ராமசெல்வம், புனிதா மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் டெய்சி, தினேஷ் அடங்கிய மருத்துவக் குழுவினரால் குறும்பலாப்பேரி கிராமத்தில் உள்ள 400 கால்நடைகளுக்கு காதுவில்லை பொருத்தி தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டது.

இத்தடுப்பூசி முகாம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத்துறையால் மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 21 வரை தென்காசி மாவட்டத்திலுள்ள 1,33,745 கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை அந்தந்த கிராமங்களில் தடுப்பூசி போடும் இடத்திற்கு கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு கால் மற்றும் வாய் நோயிலிருந்து பாதுகாத்துக்கொண்டு பொருளாதார இழப்பை தவிர்த்திடுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 1 March 2023 6:23 AM GMT

Related News