/* */

சிவகங்கை புத்தகத் திருவிழா: ஆட்சியர்: ஊராட்சி ஒன்றியம் மூலம் 1 லட்சம் நன்கொடை

சிவகங்கை புத்தகத்திருவிழாவில் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ஆட்சியரிடம் ரூ.1 இலட்சம் நன்கொடை வழங்கப்பட்டது

HIGHLIGHTS

சிவகங்கை  புத்தகத் திருவிழா: ஆட்சியர்: ஊராட்சி ஒன்றியம் மூலம் 1 லட்சம் நன்கொடை
X

சிவகங்கை புத்தகத்திருவிழாவில் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ஆட்சியரிடம் ரூ.1 இலட்சம் நன்கொடை வழங்கப்பட்டது

புத்தகத்திருவிழாவில் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ரூ.1 இலட்சம் நன்கொடையும் மற்றும் ஊராட்சி ஒன்றிய நூலகங்கள், 42 கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூகலகங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கும் வகையில், ரூ.4.25 இலட்சத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டியிடம் வழங்கினர்.

சிவகங்கை புத்தகத்திருவிழா மன்னர் மேல்நிலைப்பள்ளியில், அமைச்சர் பெருமக்களால், துவக்கி வைக்கப்பட்டு, இன்று (25.04.2022) 11-ஆம் நாள் நிகழ்ச்சியாக இன்றையதினம் பெருந்திரள் வாசிப்பு, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், திறமைமிக்க பேச்சாளர்களைக் கொண்ட கருத்துரை நிகழ்ச்சிகள் ஆகியவைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டும், கிராமப்புறங்களைச் சார்ந்த இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உறுதுணையாகவும், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்வதற்கும், அனைத்துத்தரப்பு மக்களின் மன அமைதியை சீராக வைத்துக் கொள்வதற்கும் புத்தகங்கள் மற்றும் நூலகங்கள் அடிப்படையாக அமைகிறது. இப்புத்தகத்திருவிழாவில் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளும் தங்களது பங்களிப்பை அளித்திடும் பொருட்டு, புத்தகத்திருவிழாவிற்கு நன்கொடை வழங்கியும், பள்ளி நூலகங்கள் மற்றும் கிராமப்புற நூலகங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வகையான புத்தகங்கை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். அந்தந்த ஊராட்சியிலுள்ள ஊராட்சி மன்றத்தலைவர்கள் சிவகங்கை புத்தகத்திருவிழா குறித்து எடுத்துரைத்து, தங்களது ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களை சிவகங்கை புத்தகத்திருவிழாவில் பங்குபெறச் செய்தும் வருகின்றனர்.

மேலும், இப்புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ளும் தன்னார்வலர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி, அப்புத்தகங்களை தங்களுக்கு விருப்பமுள்ள நூலகங்களுக்கு வழங்கிடும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தகத்திருவிழாவின் 11-ஆம் நாள் நிகழ்ச்சியின் போது, தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 42 ஊராட்சிகளைச் சார்ந்த சார்ந்த ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்புக்கள் சார்பாக ரூ.1 இலட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஊராட்சி ஒன்றிய நூலகங்கள், 42 கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூகலகங்களுக்கு புத்தகங்களை வழங்கும் வகையில் ரூ.4.25 இலட்சத்திற்கான காசோலையினையும் நன்கொடையாக மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன்ரெட்டியிடம் வழங்கினர்.

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், நூலகங்களின் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதிகளை ஏற்படுத்திட தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் முன்வந்து, சிவகங்கையில் நடைபெற்று வரும் புத்தகத்திருவிழாவில் தங்களது பங்களிப்பை ஏற்படுத்தி, சிறப்பாக நடத்திட உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் பிர்லா கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மா.வீரராகவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரத்தினவேல், தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஸ்ரீதர் (வ.ஊ.), மாலதி (கி.ஊ.), மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 April 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...