/* */

ஒளிப்பதிவு சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: எம்பி- கார்த்திக் சிதம்பரம்

ஒளிப்பதிவு சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: எம்பி- கார்த்திக் சிதம்பரம்
X

திரைத்துறைக்கான ஒளிப்பதிவு சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று எம்பி கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல் டீசல் கேஸ் விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் அறிவிக்கபட்ட நிலையில் இன்று சிவகங்கையில் அரண்மனை வாசல் முன்பு சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அதன்பின்னர், எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சிலிங்கை முறையாக நடத்த வேண்டும்,மாநிலங்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஒன்றிய அரசின் எந்த ஒரு அமைச்சருக்கும் அதிகாரம் இல்லை. பிரதமர் மோடிக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. அதனால் அமைச்சர வையை மாற்றுவதால் எந்த ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை.

திரைதுறையில் ஒளிப்பதிவு சட்டத்தை கொண்டு வந்ததற்கு திரைத்துறையின் அனைத்து பிரிவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ஒளிப்பதிவு சட்டம் நடைமுறைக்கு வராது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவே அந்தச்சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.

Updated On: 8 July 2021 12:41 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து