/* */

இராமநாதபுரத்தில் தேசிய அளவிலான ஸ்டாண்ட்-அப் பேடல் சாம்பியன்ஷிப் போட்டி

பிரப்பன்வலசை கடற்கரையில் தேசிய ஸ்டாண்ட்-அப் பேடல் சாம்பியன்ஷிப் போட்டி. 9 மாநிலங்களை சேர்ந்த 62 வீரர்கள் பங்கேற்பு

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் தேசிய அளவிலான ஸ்டாண்ட்-அப் பேடல் சாம்பியன்ஷிப் போட்டி
X

 கடற்கரையில் தேசிய அளவிலான ஸ்டாண்ட்-அப் பேடல் சாம்பியன்ஷிப் போட்டி.

பிரப்பன்வலசை கடற்கரையில் தேசிய அளவிலான ஸ்டாண்ட்-அப் பேடல் சாம்பியன்ஷிப் போட்டி. 9 மாநிலங்களை சேர்ந்த 62 தடகள வீரர்கள் பங்கேற்பு.

தேசிய அளவிலான ஸ்டாண்ட்-அப் பேடல் சாம்பியன்ஷிப்க்கான முதல் போட்டி ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் கலந்து கொண்ட சென்னை மற்றும் புனேவை சேர்ந்த தடகள வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்து பிரப்பன்;வலசை வடக்கு பாக்ஜலசந்தி கடற்கரையில் சர்ஃபிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் சர்ஃபிங், ஸ்டாண்ட்-அப் பேட்லிங் விளையாட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட பாக்பே தேசிய ஸ்டாண்ட்-அப் பேட்லிங் சாம்பியன்ஷிப் 2022 போட்டிகள் இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இந்த போட்டி வியாழன் மற்றும் வெள்ளிகிழமை என இரு நாட்கள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியினை இந்திய சர்ஃபிங் கூட்டமைப்பு தலைவர், ஐஎன்எஸ் கடற்படை தளத்தின் கமெண்டர், இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் நிலைய கமெண்டர், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விளையாட்டு கொடியை ஏற்றி துவக்கி வைத்தனர்.

தேசிய அளவில் நடைபெறும் இந்த நீர் விளையாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கோவா, ஒரிசா, கல்கத்தா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களை சேர்ந்த 62 தடகள வீரர்கள் கலந்து கொள்கின்றனர். பாக்ஜலசந்தி கடலில் ஸ்பிரின்ட், தொழில்நுட்ப பந்தயம் டிஸ்டன்ஸ் என்கின்ற மூன்று பிரிவுகளின் கீழ் நீர் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் பங்கு பெற்று வெற்றி பெறும் தடகள வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச நீர் விளையாட்டு போட்டியில் பங்கு பெற தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற தொழில்நுட்ப பந்தயத்தில் போட்டியில் ஆண்கள், பெண்கள் என 62 தடகள வீரர்கள் பங்கேற்றனர். 2 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் இந்த தொழில்நுட்ப பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த சேகர் என்ற தடகள வீரர், மகளிர் பிரிவில் கலந்து கொண்ட புனேவை சேர்ந்த காயத்ரி என்ற வீராங்கனை ஆகிய இருவரும் இறுதி போட்டியில் வெற்றி பெற்று தேசிய சாம்பியன்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது குறித்து மகளிர் பிரிவில் வெற்றி பெற்ற காயத்ரி கூறுகையில்: வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, மிகவும் கடினமான இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் இப்போது நான் வெற்றி பெற்று தேசிய சாம்பியனான மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளதாக தெரிவித்தார். நாளை 12 கிலோ மீட்டர் தூரம் டிஸ்டன்ஸ் மற்றும் 200 மீட்டர் ஸ்பிரின்ட் போட்டிகளுக்கான இறுதி போட்டி நடைபெற உள்ளது.

Updated On: 28 April 2022 3:45 PM GMT

Related News