/* */

இராமநாதபுரத்தில் மின் உற்பத்தி செயல்பாடுகளை சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழுவினர் பட்டணம்காத்தான், ஆர்.எஸ்.மடை பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் ஆய்வு.

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் மின் உற்பத்தி செயல்பாடுகளை சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு ஆய்வு
X

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழுவினர் பட்டணம்காத்தான், ஆர்.எஸ்.மடை பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட இரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் தலைவர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் தலைமையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆண்டறிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்கள்.

சட்டமன்ற குழு உறுப்பினர்களான குடியாத்தம் (தனி) சட்டமன்ற உறுப்பினர் அமலு, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் (எ) செல்வம், கங்கவல்லி (தனி) சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில், எரிசக்தித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் கடந்த ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கை சமர்ப்பித்தலில் உள்ள தாமதம் குறித்தும் அதற்கான விளக்கம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழுத்தலைவர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குழுவாகும். இக்குழுவின் கீழ் கிட்டத்தட்ட 64 பொதுத்துறை நிறுவனங்கள், 2 வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுவின் மூலம் ஆண்டு தோறும் ஒரு துறைக்கு, பொது நிறுவனங்கள், கழகத்திற்கு மற்றும் வாரியங்களுக்கு அரசு வழங்க கூடிய முதலீடுகளை முறையாக பெற்று, எந்த நோக்கத்திற்காக அரசு நிதி ஓதுக்கீடு செய்தததோ அத்திட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதனையும், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறைக்கும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட முதலீடுகளுக்கான கணக்குகளையும், தணிக்கை கணக்குகளும் இக்குழு மூலமாக சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு நாள் மின் தேவை மொத்தம் 118 மெகாவாட் என கணக்கிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 187.2 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு, இராமநாதபுரம் மாவட்டம் மின்மிகை மாவட்டமாக திகழ்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி இம்மாவட்டத்தில் உள்ள அக்காள்மடம், நென்மேனி, கோவிலாங்குளம், கீழராமநதி, எம்.கரிசல்குளம், திருஉத்திரகோசமங்கை, திருப்புல்லானி ஆகிய இடங்களில் மொத்தம் ரூ.1979 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே கடலாடி, இராமேஸ்வரம் மற்றும் இராமநாதபுரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தலா 33 மு.ஏ திறன்கொண்ட துணை மின் நிலையங்களை 110 மு.ஏ திறன் கொண்டதாக மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் நோக்கில் குடிநீர் திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி மணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கடந்த 2009 ஆம் ஆண்டில் ரூ.616 கோடி மதிப்பீட்டில் காவிரி-இராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் தடுத்திட உதவியது. இத்திட்டத்தை இன்றைய மக்கள் தொகைக்கேற்ப விரிவுபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல, நரிப்பையூர் மற்றும் குதிரைமொழி ஆகிய கடல்நீரை நன்னீராக்கும் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் தனிநபருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டர் அளவிலும், ஊரக பகுதிகளில் தனிநபருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் அளவிலும் தண்ணீர் விநியோகம் உறுதி செய்திடும் வகையில் பணிகள் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழுத்தலைவர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பட்டணம்காத்தான் மற்றும் ஆர்.எஸ்.மடை பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்கள், வழுதூர் பகுதியில் செயல்பட்டு வரும் எரிவாயு சுழலி மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர் லால் குமாவத், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் (பதிவாளர்) ந.இரவிச்சந்திரன், இணைச் செயலாளர் (பதிவாளர்) தே.நாகராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திசைவீரன், உட்பட அரசுத்துறை பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Oct 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...