/* */

நகராட்சி 26 வது வார்டை முன்மாதிரியாக வார்டாக மாற்றுவேன்:அதிமுக வேட்பாளர் உறுதி

பொதுமக்களையும் சிறுவர்களையும் அச்சுறுத்தும் விதமாக சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை

HIGHLIGHTS

நகராட்சி  26 வது வார்டை முன்மாதிரியாக வார்டாக மாற்றுவேன்:அதிமுக  வேட்பாளர் உறுதி
X

 நகராட்சி 26 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் துளவத்தாமம் கலியமூர்த்தி தனது வார்டுக்கு உட்பட்ட நிஜாம் காலனியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியே வந்தவர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்குகளை சேகரித்தார்.

புதுக்கோட்டை நகராட்சி 26 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் துளவத்தாமம் கலியமூர்த்தி தனது வார்டுக்கு உட்பட்ட நிஜாம் காலனியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியே வந்தவர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்குகளை சேகரித்தார்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளுக்கும் வரும் 19ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.தற்போது களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 26 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் துளவத்தாமம் கலியமூர்த்தி இன்று நிஜம் காலனியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்தவர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்குகள் சேகரித்தார்.

மேலும் என்னை இந்த தேர்தலில் வெற்றி பெறச் செய்தால், இந்த வார்டிற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம் படுத்துவேன்.தெருக்களில் பொதுமக்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் அச்சுறுத்தும் விதமாக சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். எனது வார்டில் உள்ள பொதுமக்களுக்கு எந்த நோயும் ஏற்படாதவாறு சுகாதார வார்டாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தார்.

Updated On: 11 Feb 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...