/* */

புதுக்கோட்டை அதிமுக வேட்பாளர் புகாருக்கு விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் பதில்

விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் தன்னை மிரட்டுவதாக அதிமுக வேட்பாளர் கூறிய புகாருக்கு விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் பர்வேஸ் பதிலளித்துள்ளார்

HIGHLIGHTS

புதுக்கோட்டை அதிமுக வேட்பாளர் புகாருக்கு விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் பதில்
X

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் மற்றும் அதிமுக வேட்பாளர்

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகள் உள்ளது இதில் 4வது வார்டு அதிமுக வேட்பாளராக பாபு என்ற கோமதி சங்கர் போட்டியிடுகிறார்

இந்த வார்டில் அதிமுக, திமுக, விஜய் மக்கள் இயக்க வேட்பாளராக மற்றும் சுயேச்சைகள் என பலர் போட்டி போடுகின்றனர். இதில் விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளராகவும் உள்ள பர்வேஸ் என்பவருக்கும் தான் அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் பல அச்சுறுத்தல் காரணமாக தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட துரைராஜ் என்பவரும் மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வேட்பு மனுவை வாபஸ் பெற்று விட்டனர்.

இந்த வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் கோமதி சங்கர், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் போது வார்டு மக்களுக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தன்னை பின் தொடர்ந்து வருவதாகவும் பல்வேறு இடைஞ்சல்களை கொடுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்

மேலும் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் மிரட்டல் விடுவதாகவும், வேட்பு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு இடையூறுகளை கொடுத்து வருவதாகவும் கோமதி சங்கர் கூறியுள்ளார். இது போன்று பல்வேறு அச்சுறுத்தல் கொடுப்பதால் ஏன் நாம் இந்த தேர்தலில் போட்டியிட்டோம் என்று சிந்திக்கும் அளவிற்கு தன்னுடைய மனநிலை வந்துவிட்டதாகவும் இது போன்ற மற்ற வேட்பாளர்களும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் பர்வேஸ் தந்தை ஜாபர் அலி அதிமுகவின் முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இது குறித்து அதே வார்டில் போட்டியிடும் வேட்பாளர் பர்வேஸ்சிடம் கேட்டபோது:

கடந்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து 4வது வார்டு மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறேன். எனக்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பை பார்த்து அதிமுக வேட்பாளருக்கு தோல்வி பயம் ஏற்பட்டதால் தான் அவர் என் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. என் மீது யார் புகார்கள் சொன்னாலும் எனது வார்டு மக்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும் அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு என்றைக்கும் நான் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பேன் என்று கூறினார்.

Updated On: 10 Feb 2022 12:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு