/* */

புதை சாக்கடை திட்ட பணிகளை முறையாக அமைக்க வேண்டும்:நகர்மன்றஉறுப்பினர்கள் கோரிக்கை

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் புதை சாக்கடை திட்ட பணிகள் நடைபெற வேண்டுமென நகராட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்

HIGHLIGHTS

புதை சாக்கடை திட்ட பணிகளை முறையாக அமைக்க வேண்டும்:நகர்மன்றஉறுப்பினர்கள் கோரிக்கை
X

புதுக்கோட்டை டவுன்ஹாலில் நகர்மன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஆட்சியர் கவிதாராமு, நகர்மன்றத்தலைவர் திலகவதிசெந்தில் 

இந்த கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் தலைமை வகித்தனர்

புதுக்கோட்டை நகராட்சியில் புதை சாக்கடை திட்ட பணிகளை முறைப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் புதை சாக்கடை திட்ட பணிகள் துவக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக புதை சாக்கடைத் திட்டங்கள் நடைபெற்று வந்தது .மேலும் தமிழகம் முழுவதும் சாக்கடை கழிவுநீர் வெளியே செல்லாமல் சாலையின் அடியில் சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக ஆட்சிகாலத்தில் புதை சாக்கடை பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு புதை சாக்கடை திட்ட பணிகளை நிறைவேற்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்து பணிகளை விரிவுபடுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை நகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான புதை சாக்கடை அமைத்தல் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்தல் குறைத்து டவுன்ஹாலில் நகர்மன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் 42 வார்டுகளை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதை சாக்கடை திட்ட பணிகள் எவ்வாறு நடைபெற வேண்டும்.. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் புதை சாக்கடை திட்ட பணிகள் நடைபெற வேண்டும்.ஒரு பகுதிகளில் புதை சாக்கடை திட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்ட அந்த பணியை முடித்துவிட்டு அடுத்த பகுதியில் திட்டத்தை தொடங்க வேண்டுமென வலியுறுத்தினர்.

மேலும் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் என் கே பில்டுகான் பிரைவேட் லிமிடெட் சார்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு புதை சாக்கடை திட்ட பணிகள் எவ்வாறு செயல்படுத்த இருக்கிறது என்பது குறித்தும் நகரமன்ற உறுப்பினர்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பல்வேறு கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 26 April 2022 9:09 AM GMT

Related News