/* */

புதுக்கோட்டையில் நேரிட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம்

தீயில் வீடுகளை இழந்த தவித்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தேவையான அனைத்து உதவிகளையும் செய்யமாறு எம்எல்ஏ உத்தரவிட்டார்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் நேரிட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம்
X

புதுக்கோட்டை மாலையிடு அருகே உள்ள முல்லை நகரில் இன்று ஏற்பட்ட தீ விபத்தினால் 6 வீடுகள் எரிந்து நாசமான இடத்தை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, நகராட்சி நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு தீ விபத்தினால் வீடுகளை இழந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்

புதுக்கோட்டை மாலையீட்டிலுள்ள முல்லை நகரில் மின்கசிவு காரணமாக 6 வீடுகள் எரிந்து நாசம் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் தீயில் கருகியது.

புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் உள்ள முல்லை நகரில் இன்று ஒரு குடிசை வீட்டில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் ஆனால் ஒரு வீட்டில் பிடித்த தீ அருகில் உள்ள மற்ற குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளும் பரவியது இதனால் பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் பெரிதும் சிரமப்பட்டனர்.

இது குறித்து உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் ஆனால் அதற்குள் தீப்பற்றிய நான்கு குடிசை வீடுகளும் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது மேலும் இரண்டு ஓட்டுவிடுகளில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அனைத்தால் அந்த வீடுகளில் இருந்த பொருட்கள் தப்பியது. ஆனால் குடிசை வீடுகளில் பற்றிய தீயினால் குடிசை வீட்டிற்குள் இருந்த பீரோ கிரைண்டர், டிவி, மிக்ஸி, குடும்ப அட்டைகள் ஆதார் அட்டைகள் மற்றும் விளையாட்டு சான்றிதழ்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இது குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில்குமார் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜன் அந்த வார்டு கவுன்சிலர் காதர்கனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினால் வீடுகளை இழந்த தவித்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் தீ விபத்தினால் வீடுகளை இழந்து தவித்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.4000 நிதி உதவியை முல்லை முபாரக் வழங்கினார்.

Updated On: 11 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...