/* */

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பல்லவன் குளத்தை சுத்தம் செய்த பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பல்லவன் குளத்தை சுத்தம் செய்த பள்ளி மாணவர்கள்.

HIGHLIGHTS

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பல்லவன் குளத்தை சுத்தம் செய்த பள்ளி மாணவர்கள்
X

புதுக்கோட்டையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பல்லவன் குளத்தை சுத்தம் செய்தனர்.

புதுக்கோட்டையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பல்லவன் குளத்தை சுத்தம் செய்த பள்ளி மாணவர்கள்.

தமிழகம் முழுவதும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரை எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்துவது குளங்களில் தண்ணீரை சேமிப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் சார்பாக உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நமது புதுக்கோட்டை நீர்நிலைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பல்லவன் குளம் உள்ளே தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு பணி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியினை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி மோகன்ராஜா ஏற்பாடுகளை செய்திருந்தார். வருகை தந்த அனைவரையும் விளையாட்டுத்துறை ஆசிரியர் முத்துராமலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் நகராட்சியை துணை தலைவர் லியாக்கத் அலி, திமுக மாவட்ட பொருளாளர் செந்தில், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். டாக்டர் கார்த்திக், நகராட்சி அலுவலர் ஜெய்சங்கர், நகர துணைத்தலைவர் அப்பு காளை, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் செந்தில்வேல், நகரமன்ற உறுப்பினர்கள் மெஸ் மூர்த்தி, பால்ராஜ். கல்யாணி கவரிங் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சமூக சேவகர் மேட்டுப்பட்டி செந்தில் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் பல்லவன் குளம் உள்பகுதியில் உள்ள காலி பாட்டில்கள் அனைத்தையும் சுத்தம் செய்யப்பட்டது. நிறைவாக பட்டதாரி ஆசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Updated On: 22 March 2022 9:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  4. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  5. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  8. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  9. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...