/* */

புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இனிப்புடன் ஒரு விழிப்புணர்வு

புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இனிப்புடன் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை உணவு பாதுகாபாத் துறை சார்பில் செய்திருந்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில்   இனிப்புடன் ஒரு விழிப்புணர்வு
X

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ளதையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்துமேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அந்த வகையில் புதுக்கோட்டைபுதியபேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பேக்கரி கடை உரிமையாளர்கள் மூலம் கேக்கால் அமைக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு மாதிரி இளம் வாக்காளர்களைக் கொண்டு திறந்து வைத்து பார்வையிடப்பட்டது.

மேலும் பிஸ்கட்டில் அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் உதவி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களும் இதில் எழுதப்பட்டிருந்தது. இதே போன்று மாவட்டம் முழுவதும் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்குதல், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, மினி மாராத்தான், மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று கோவிட்-19 தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்றி வாக்களிக்க வேண்டும் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்தார். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிகுமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவீன்குமார், நகராட்சி ஆணையர் பொறுப்பு ஜீவாசுப்பிரமணியன், வட்டாட்சியர் முருகப்பன், இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 1 April 2021 4:25 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  2. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  3. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  4. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  5. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  6. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  7. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  8. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!