/* */

அரசுப் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கல்

HIGHLIGHTS

அரசுப் பணியின்போது உயிரிழந்தவர்களின்  வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை
X

அரசுப் பணியின் போது, உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

அரசுப் பணியின் போது, உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசுப் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, அரிமளம்ஊராட்சி ஒன்றியத்தில், அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து 16.02.2019 அன்று உயிரிழந்த வலிமுகமது என்பவரது வாரிசுதாரரான மகன் இம்ரான் நசீர் என்பவருக்கு ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராகவும் மற்றும் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து 31.10.2019 அன்று உயிரிழந்த திலகேஸ்வரன் என்பவரது வாரிசுதாரரான மகன் சத்தியமூர்த்தி என்பவருக்கு பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராகவும் பணிபுரிய கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

பணி நியமன ஆணைகளை பெற்றவர்களிடம் சிறப்பாக பணியாற்றிட மாவட்ட ஆட்சித் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தமிழ்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 1 March 2022 8:36 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஈரோடு
    ஈரோட்டில் ஐ.டி., ஊழியர் வீட்டில் நகை, செல்போன் திருட்டு வழக்கில் 2...
  3. சினிமா
    தாசனுக்கு தாசன் 'கண்ண'தாசன் தான்..!
  4. உலகம்
    பா.ஜ.க.,வுக்கு எத்தனை சீட்? சீனாவின் குளோபல் டைம்ஸ் கணிப்பு..!
  5. சினிமா
    தன்னலம் பார்க்காத கலைஞர் ராமமூர்த்தி..!
  6. சினிமா
    சாமானியன் எப்படி இருக்கிறான்?
  7. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் பிறந்த நாளை கொண்டாடுவது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    முதல் பிறந்த நாளை எப்படி கொண்டாடலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் சீனப் புத்தாண்டு: ஒரு ஒப்பீட்டு ஆய்வு
  10. வீடியோ
    Modi கொடுத்த தரமான பதில் |😳அதிர்ச்சியில் வெள்ளை மாளிகை |#narendramodi...