/* */

ஈரோட்டில் ஐ.டி., ஊழியர் வீட்டில் நகை, செல்போன் திருட்டு வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

Erode news- ஈரோட்டில் ஐ.டி., ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை மற்றும் செல்போன் திருடிய வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் ஐ.டி., ஊழியர் வீட்டில் நகை, செல்போன் திருட்டு வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
X

Erode news- திருடு போன நகைகள் மற்றும் செல்போனை போலீசார் மீட்டனர்.

Erode news, Erode news today- ஈரோட்டில் ஐ.டி., ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை மற்றும் செல்போன் திருடிய வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகர் 2வது வீதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 38). இவர் கோவையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி வீட்டின் வெளியே உள்ள சுற்றுச்சுவர் இரும்பு கதவை பூட்டி விட்டு, வீட்டின் முன்புற மர கதவை திறந்து வைத்து குடும்பத்தினருடன் தூங்க சென்றார்.


மறுநாள் அதிகாலையில் எழுந்து படுக்கை அறைக்குள் சென்று பார்த்தார். அப்போது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 38.5 பவுன் நகைகளையும், வீட்டில் இருந்த செல்போனையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகை மற்றும் செல்போனை திருடிச்சென்ற மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இவர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து வந்தனர். இந்த நிலையில் ஐ.டி. ஊழியர் வீட்டில் நகையை திருடியதாக, ஈரோடு மாணிக்கம்பாளையம் தென்றல் நகரை சேர்ந்த மகேந்திரன் (வயது 19) மற்றும் 18, 16 வயதுடைய 2 சிறுவர்கள் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 38.5 பவுன் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Updated On: 25 May 2024 9:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
  2. வந்தவாசி
    நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. செங்கம்
    பேருந்து நிறுத்தம் அருகே மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள்...
  4. கலசப்பாக்கம்
    அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட...
  5. நாமக்கல்
    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கொமதேக...
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.18) மின்தடை அறிவிப்பு
  7. திருவண்ணாமலை
    டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் ஆனி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்