/* */

பெண்களுக்கு என்று தனியாக இயங்கி வரும் பெண்கள் பாதுகாப்பு மையம்

பெண்கள் பாதுகாப்பு மையத்தின் மூலம் பெண்களின் குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

HIGHLIGHTS

பெண்களுக்கு என்று தனியாக இயங்கி வரும் பெண்கள் பாதுகாப்பு மையம்
X

பெண்களுக்கு என்று தனியாக இயங்கி வரும் பெண்கள் பாதுகாப்பு மையத்தின் மூலம் பெண்களின் குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணி்ப்பாளர் மணி பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்களை பாதுகாக்க பெண்கள் பாதுகாப்பு மையம் என தனியாக தொடங்கப்பட்டு அதனை தொடர்பு கொள்ள 181 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை அறிமுகம் செய்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் மேற்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்டம் நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் 181 இலவச இணைப்பை தொடர்பு கொண்டு தன்னை தன் கணவர் குடித்துவிட்டு வந்து அடிப்பதாகவும் தனது கைக்குழந்தையை பிடிங்கி வைத்துக் கொண்டு கொடுக்க மறுப்பதாகவும் புகார் செய்தார்.

மேற்படி அழைப்பினை ஏற்ற பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணி்பபாளர் மணி உத்தரவின்படி பெண்கள் நல உதவிமைய உறுப்பினர்கள் மூலம் பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாவலுர் கிராமத்திற்கு விரைந்து சென்று புகாரளித்த பெண்ணை சந்தித்து அவரது குறைகளை கேட்டு அவரது கணவரை அழைத்து அவர்களுக்கு குடும்ப நல ஆலோசனை வழங்கி குழந்தையை தாயாரிடம் ஒப்படைத்தனர்.

குடும்பப் பெண்கள் அனைவரும் பிரச்சனைகளை மாவட்ட காவல் துறைக்கு 181 இலவச இணைப்பை தொடர்பு கொண்டு தைரியமாக தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 10 July 2021 3:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  7. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  8. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  9. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்