நாமகிரிப்பேட்டையில் ரூ. 15 கோடி மதிப்பில் நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் : ராஜேஷ்குமார், எம்.பி., அடிக்கல் நாட்டினார்

நாமகிரிப்பேட்டையில் ரூ. 15 கோடி மதிப்பில், நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிக்கு, ராஜேஷ்குமார், எம்.பி., அடிக்கல் நாட்டினார். அருகில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, அரியாக்கவுண்டம்பட்டியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 15 கோடி மதிப்பில், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி மற்றும் ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்துகளுக்கான நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார். ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் கூறியதாவது:
நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்த பகுதியில், தூய்மை இந்தியா இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி மற்றும் ஆர்.புதுப்பட்டி ஆகிய டவுன் பஞ்சாயத்து பகுதிகளுக்கு ஒன்றிணைந்து, 2 ஏக்கர் பரப்பளவில் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கசடு கழிவு மேலாண்மை வசதிகள் (2 MLD STP cum 10 KLD FSTP Treatment Plant) அமைக்கப்பட உள்ளது. இதற்காக 3 டவுன் பஞ்சாயத்து பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 21.861 கி.மீ தூரத்திற்கு பைப்லைன் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தினசரி 2 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் 3 டவுன் பஞ்சாயத்துக்களில் வசிக்கும் சுமார் 43,823 பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என கூறினார்.
நிகழ்ச்சியில் அட்மா குழுத்தலைவர் ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏ ராமசுவவாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu