ஆற்றில் மூழ்கி பலியான மாணவி 349 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி! மாணவியின் இறப்புக்கு பின் வந்த தேர்ச்சி முடிவு!

தேர்ச்சி செய்தி வருவதற்குள் வாழ்க்கை முடிந்தது - ஆற்றில் மூழ்கி பலியான மாணவி – பெற்றோர் பரிதாபம் :
தாராபுரம் அருகே வடதாரையைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியரின் 15 வயது மகள், கடந்த 8-ஆம் தேதி தனது உறவினர்களுடன் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
இவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருந்தார். நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் அவர் மொத்தம் 349 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தது தெரியவந்தது.
தனது பெயர் தேர்ச்சி பட்டியலில் இடம்பெற்றதை காணாத அந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள், தோழிகள் – அனைவரும் மீண்டும் சோகத்தில் மூழ்கினர்.
ஒரு புனித கனவுக்குள் பரிதாபமான முடிவு – என்று அனைவரும் உணர்ச்சிவசப்படுவதைப் போல, வாழ்க்கையோ ஒரு கண,ம் என நினைவூட்டிய சம்பவம் இது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu