பிளஸ் 2 முடித்தவர்களுக்கான சிறந்த அரசு பயிற்சி திட்டம்

பிளஸ் 2 முடித்தவர்களுக்கான சிறந்த அரசு பயிற்சி திட்டம்
நாமக்கல் மாவட்டம் மாணவர்களுக்கு புதிய வாய்ப்பை வழங்கும் வகையில், 2025–26ம் கல்வியாண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பயிற்சிக்கு www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், ஜூன் 20ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இந்த பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி; மேலும், விண்ணப்பதாரி 2025 ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயதிற்கான உச்சவரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியின் காலம் 12 மாதங்கள், இரு பருவ முறைகளாக நடைபெறும். முழுக்க முழுக்க தமிழ் மொழியில் மட்டுமே கற்பிக்கப்படும் இந்த பயிற்சிக்கான கட்டணம் ரூ.20,750 ஆகும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவு செய்தவுடன், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் சுய ஒப்பமிட்ட பத்திரத்தை நேரில் அல்லது பதிவு அஞ்சல் மூலம் நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் தகவலுக்கு, இணையதளம் அல்லது 04286-290908 / 9080838008 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி நடைபெறும் முகவரி: நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 796, சேலம் பிரதான சாலை, முருகன் கோவில் பஸ் ஸ்டாப்பிற்கு அருகில், நாமக்கல் – 637001.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu