தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்

தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை.
மாற்றுத் திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற டிச.1 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 38,334 மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (NIDC) பெற்றுள்ளனர். இதில் 19,410 மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பெற்றுள்ளனர். மீதமுள்ள 18,924 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) சிரமம் இல்லாமல் கிடைக்கப்பெறுவதற்காக, சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி 1.12.2023 அன்று முதல் 7.12.2023 வரை அந்தந்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள இ - சேவை மையங்கள் (வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ - சேவை மையங்கள் தவிர) மூலம் மிக குறைவான சேவை கட்டணத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இ - சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத் திறனாளி அடையாள அட்டை. (NIDC) மற்றும் மருத்துவச்சான்று (FORM -VII) - அசல், ஆதார் அட்டை. - அசல், புகைப்படம் (passport size). - 1, பயனாளியின் தொலைபேசி என் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். மேற்கண்ட நாட்களில் நடைபெறும் முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu