திருச்செங்கோட்டில் 410 பள்ளி வாகனங்கள் திடீர் ஆய்வு

திருச்செங்கோட்டில் 410 பள்ளி வாகனங்கள் திடீர் ஆய்வு
தமிழக அரசின் உத்தரவுப்படி, ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பள்ளி வாகனங்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக உள்ளனவா என பரிசோதனை நடைபெறுகிறது. அதன் அடிப்படையில், திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 30 பள்ளிகளின் 410 பள்ளி வாகனங்கள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த சோதனையை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகந்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் மோகனப்பிரியா, தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் சரவணன், மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டனர். ஆய்வின் போது, வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், மாணவர்கள் ஏறும் படிகள் உறுதி, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தகுதி, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டிகள், அவசர வெளியேறும் வழிகள், புகை சான்றிதழ், பசுமை சான்றிதழ் ஆகியவை உள்ளதா என ஒவ்வொன்றாக சோதனை செய்யப்பட்டன.
சோதனையில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களுக்கு, அவற்றை சரிசெய்து குறிப்பிட்ட காலத்துக்குள் தகுதிச்சான்று பெறுதல் கட்டாயம் என வட்டார போக்குவரத்து அலுவலர் மோகனப்பிரியா அறிவுறுத்தினார். இந்த நடவடிக்கை, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளுக்குப் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu