ரயில்வே கூட்ஸ் செட்டில் முன்னுரிமை அடிப்படையில் லோடு வழங்க கோரிக்கை

டோக்கன் பெறும் லாரிகளுக்கு மட்டுமே லோடு செய்யும் நடைமுறையை மாற்றி, முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க கூட்ஸ் செட் லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

ரயில்வே கூட்ஸ் செட்டில் முன்னுரிமை அடிப்படையில் லோடு வழங்க கோரிக்கை
X

பைல் படம் 

டோக்கன் பெறும் லாரிகளுக்கு மட்டுமே லோடு செய்யும் நடைமுறையை மாற்றி, முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படி லோடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூட்ஸ் செட் லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாமக்கல் கூட்ஸ்செட் லாரி ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில், நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் ரயில் நிலையத்தில், கடந்த 10 ஆண்டுகளாக வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பொருட்களை கூட்ஸ்செட் லாரிகள் மூலம் ஏற்றி சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறோம்.

இந்நிலையில், 2023, டிச. 15 முதல், முன் அறிவிப்பின்றி, அசோசியேசன் மூலம் லோடுகளை எடுக்க வேண்டும். மேலும், எடுக்கப்படும் லாரிகளுக்கு, ரூ. 100 வீதம் பணம் கட்டி டோக்கன் பெற வேண்டும் என நிர்ப்பந்தம் செய்கின்றனர்.

நாங்கள், 10 ஆண்டுகளாக, 80 லாரிளை வைத்து, அதன் டிரைவர், கிளீனர், லாரி உரிமையாளர் அனைவரும், இவற்றை நம்பி பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது, அசோசியேசன் மூலம் ரூ. 100 செலுத்தி டோக்கன் பெற்று செல்லும் வண்டிகளுக்கு மட்டும் லோடு ஏற்ற வேண்டும் என நிர்பந்தம் செய்வதால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

வெளி மாவட்ட வண்டிகளும் இங்கு வந்து லோடு ஏற்றி செல்கிறது. அதனால், எங்களுடைய, 80 லாரிகளும் லோடு ஏற்றமால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, லாரிகளுக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. எங்கள் நிலையை கருத்தில் கொண்டும், எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், 10 ஆண்டுகளாக உள்ள நடைமுறையை பின்பற்றுவதுடன், லாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படி லோடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 13 Feb 2024 12:45 AM GMT

Related News

Latest News

 1. வணிகம்
  பாதுகாப்பான் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு என்ன செய்யணும்? RBI வழி...
 2. சினிமா
  பெண்கள் முட்டாள்கள்.. ஆண்களுக்காக இப்படி இருக்கக்கூடாது: ஜெயா பச்சன்
 3. தொழில்நுட்பம்
  உங்கள் பென்ஷன் PPO எண்ணை எப்படி கண்டுபிடிப்பது?
 4. டாக்டர் சார்
  இயற்கை வழிகளில் யூரிக் அமில அளவைக் குறைப்பது எப்படி?
 5. திருப்பூர் மாநகர்
  மார்ச் 1ல், திருப்பூரில் நிட்டெக் -2024 பின்னலாடை இயந்திரக் கண்காட்சி
 6. இந்தியா
  வாரணாசியில் பிரதமர் மோடி இன்று என்ன செய்யப்போகிறார்?
 7. காஞ்சிபுரம்
  அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்த்த காஞ்சிபுரம் வருவாய்...
 8. திருவள்ளூர்
  கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் தமாகா தலைவர் ஜி கே.வாசன்...
 9. இந்தியா
  மாலத்தீவு பகுதியில் சீன உளவு கப்பல். ஆராய்ச்சி கப்பல் என்கிறது சீனா
 10. திருச்செந்தூர்
  கோலாகலமாக நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி...