இராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் தெப்பக்குளம் சீரமைப்பு பணி துவக்கம்

இராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் தெப்பக்குளம் சீரமைப்பு பணி துவக்கம்

இராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் தெப்பக்குளம், சீரமைப்புப் பணி துவக்க விழா, சிறப்பு பூஜையுடன் துவங்கியது.

ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் தெப்பக்குளம் சீரமைப்பு பணி துவக்க விழா நடைபெற்றது. ராசிபுரம் நகரில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ கைலாசநாதர் கோயில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் படிக்கட்டுகளை சீரமைத்து, கருங்கல் படிகள், மதில் சுவர், நீராழி மண்டபம் ஆகிய அனைத்து திருப்பணியும் கருங்கல்லில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான திருப்பணியை, சிவனடியார்கள் திருப்பணியை சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தனர். ராசிபுரம் தெப்பக்குளம் திருப்பணி அறக்கட்டளை சார்பில் இந்த திருப்பணி நடைபெற்று வருகிறது. திருமுறை பாடல்களைப் பாடி வேள்விகள் செய்து பணி தொடங்கப்பட்டது. தெப்பக்குளம் திருப்பணி அறக்கட்டளை சார்பில் திருப்பணியை குருமார்கள் ஒளியரசு தலைமையில் கோவை குமரலிங்கம், ஈரோடு வெங்கடேசன் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியில், திருப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள், சிவனடியார்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story