பிரதமரின் தேசிய அப்ரண்டீஸ் திட்டம் நாமக்கல்லில் 13ம் தேதி சேர்க்கை முகாம்

பைல் படம்
நாமக்கல்,
இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தேசிய தொழிற்பழகுனர் (அப்ரண்டீஸ்) ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், நாமக்கல் மாவட்ட அளவில், பிரதமரின் தேசிய தொழிற்பழகுனர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம், நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற மே 13ம் தேதி, காலை 10 முதல், மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
அரசு, தனியார் ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில், ஐ.டி.ஐ. பயிற்சி முடித்து, இதுநாள் வரை அப்ரண்டீஸ் பயிற்சி மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள், தங்களது கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன், தொழிற்பழகுனர் சேர்க்கை முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை அனுகலாம். 04286- 290297, 94877 45094, 79041 11101 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu