தினசரி 3 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது! – அலட்சியத்திற்கு மக்கள் கொந்தளிப்பு

தினசரி 3 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது! – அலட்சியத்திற்கு மக்கள் கொந்தளிப்பு
X
பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு இரண்டு மாதங்களாக சரிசெய்யாததால் தினசரி சுமார் 3 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது.

காங்கேயம்: தாராபுரம், குங்கடம், சென்னிமலை, வெள்ளகோவில், மூலனூர் உள்ளிட்ட 1,262 கிராமங்களுக்கு காவிரி நதிநீர் மூலம் குடிநீர் வழங்கும் ஊரக கூட்டு குடிநீர் திட்டத்தில், தரமற்ற பணிகள் காரணமாக பிரதான குழாய்களில் அடிக்கடி உடைபாடுகள் ஏற்படுகின்றன.

இப்போது, முத்தூரிலிருந்து வெள்ளகோவிலுக்கு செல்லும் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு இரண்டு மாதங்களாக சரிசெய்யப்படவில்லை. இதனால், தினசரி சுமார் 3 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது.

இந்த விளைவாக, வெள்ளகோவில் ஒன்றியம் மற்றும் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக மக்கள் கடும் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story