எங்கள் இனத்தை ஏற்க வேண்டும்!–மலைவாழ் மலையாளிகள் வலியுறுத்தல்-பள்ளி குழந்தைகள் போராட்டத்தில்!

மலைவாழ் மலையாளி இன மக்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் கிடைக்காததால் கண்டன ஆர்ப்பாட்டம் :
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் வசிக்கும் 6,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த, 30,000க்கும் மேற்பட்ட மலையாளி இன மக்கள், தங்களின் இனத்தை சான்றிடும் எஸ்.டி. (Scheduled Tribe) சான்றிதழ் பெற முடியாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
பல்வேறு முறை மனுக்கள் அளித்தும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையடுத்து, பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து, மலையாளி மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் சின்ராஜ் தலைமையில், கடம்பூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்த சான்றிதழ் இல்லாததால், கல்வி, வேலைவாய்ப்பு, விவசாய மானியங்கள் உள்ளிட்ட அரசு சலுகைகள் அனைத்தும் மறுக்கப்படுவதாகவும், இன விரிவாக்கத்துக்கும், சமூக உயர்வுக்கும் தடையாக இருப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu