தானத்தம்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழா: எம்எல்ஏ பங்கேற்பு

தானத்தம்பட்டியில் புதிய ரேஷன் கடை    கட்டிடம் திறப்பு விழா: எம்எல்ஏ பங்கேற்பு
X

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் தானத்தம்பட்டியில், புதிய ரேஷன் கடை கட்டிடத்தை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் தானத்தம்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் திறந்து வைத்தார்.

நாமக்கல்,

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் தானத்தம்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், கொளத்துபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், தானத்தம்பட்டியில் முழு நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழாவிற்கு, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். விழாவில், கூட்டுறவு சார் பதிவாளர் கள அலுவலர் சுரேஷ், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார் பதிவாளர் சரவணன், சங்க பணியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story