பெரியார் பல்கலை ஊழல், ஊழியர்கள் போராட்டம்

சேலம் பெரியார் பல்கலை வளாகத்தில் தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
சேலம் ஓமலூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு, நேற்று மாலை 5:30 மணியளவில் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலர் சக்திவேல் தலைமையிலில் பல்கலையின் நிர்வாக முறையை எதிர்த்து, “நேர்மையான நிர்வாகம் அமைக்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், பெரியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பாரதிதாசன், திருவள்ளூவர் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சேர்ந்து கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தற்போதைய துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலை வளாகத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை தொடங்க முயன்றதை தொழிலாளர் சங்கம் கடுமையாக எதிர்த்ததாகவும், அதன் தொடர்ச்சியாக தற்போது போலீஸ் துறை விசாரணை நடைபெற்று வருகின்றது என்றும் கூறினார். மேலும், அனைத்து மாநில பல்கலைக்கழகங்களுக்கும் தமிழ்நாடு முதல்வரே நேரடியாக வேந்தராக இருப்பதை சட்டப்பூர்வமாக உறுதி செய்யும் விதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், அதற்கான எதிர்பார்ப்பை இந்த போராட்டத்தின் வாயிலாக வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டம், பல்கலைக்கழக தொழிலாளர்களின் உரிமைகள், நிர்வாக பதவிகளில் நேர்மை மற்றும் சட்டபூர்வமான நிர்வாக அமைப்பு ஆகியவற்றிற்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu