நாய்கள் தாக்கியதால் ஆடுகள் பலி

நாய்கள் கடித்ததில் ஆடுகள் பலி – பெருந்துறையில் வளர்த்துவரும் இடங்களில் அதிர்ச்சி:
பெருந்துறை அருகே பாச்சாங்காட்டூர் வரப்பாளையத்தை சேர்ந்த சின்னம்மாள் (வயது 50) என்பவரது செவரங்காடு பகுதியில் உள்ள ஆட்டு பட்டியில் வைத்திருந்த 26 செம்மறி ஆடுகளில் 9 ஆடுகளை நாய்கள் கடித்துவிட்டன, இதில் ஒரு ஆடு பரிதாபமாக உயிரிழந்தது, மேலும் 8 ஆடுகள் பலத்த காயங்களுடன் இருந்தன.
அதேபோல், கம்புளியம்பட்டி மூணாம்பள்ளி பகுதியில் வசிக்கும் சின்னச்சாமி (65) என்பவர் வீட்டருகே வைத்திருந்த 60 ஆடுகளில் இரண்டு ஆடுகள் நாய்களின் கடியால் காயமடைந்துள்ளன. இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊராட்சி மக்கள், மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu