நாமக்கல்லில் மது போதையில் தகராறில் ஈடுபட்டவர் கொலை: 4 பேர் கைது

நாமக்கல்லில் மது போதையில் தகராறில்    ஈடுபட்டவர் கொலை: 4 பேர் கைது
X

பைல் படம் 

நாமக்கல்லில் ஃபாஸ்ட் ஃபுட் கடையில், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நபரை அடித்துக் கொலை செய்த இளைஞர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் போதுப்பட்டியைச் சேர்ந்தவர் ஜோதிமலர். அவர் அப்பகுதியில் பாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று முன்தினம் இரவு நாமக்கல் காவேட்டிப்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீதர் (52)என்பவர் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள டம்ளர் ஒன்றில் தான் வைத்திருந்த மதுபாட்டிலில் இருந்து மதுவை ஊற்றி குடிக்க முற்பட்டுள்ளார். இதைக் கண்ட ஜோதிமலர் கடையில் மது அருந்தக் கூடாது என ஸ்ரீதரை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், ஜோதிமலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகவல் அறிந்து வந்த ஜோதிமலரின் மருமகன் மவுலீஸ்வரன் (25), ஸ்ரீதரை சமரசம் செய்ய முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து அவரிடமும் ஸ்ரீதர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மவுலீஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் கடையில் இருந்த கரண்டி மற்றும் மதுபான பாட்டிலால் ஸ்ரீதரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்லும் செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி தலைமறைவான மவுலீஸ்வரன் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
பா.ஜ. நிர்வாகியின் வீட்டில் மர்மமான முறையில் நாய் மரணம்-சென்னிமலையில் பரபரப்பு!பா.ஜ. நிர்வாகியின் வீட்டில் மர்ம கொலை திட்டமா?