நாமக்கல் வழியாக கூடுதல் கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்க மத்திய அமைச்சருக்கு எம்.பி., கோரிக்கை

வி.எம்.மாதேஸ்வரன், நாமக்கல் கொமதேக., எம்.பி.,
நாமக்கல்,
நாமக்கல் வழியாக கூடுதல் கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என எம்.பி. மாதேஸ்வரன் மத்திய ரயில்வே அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை நாட்கள் ஆரம்பமாகி உள்ளது. இதனால் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்களுடன் பல்வேறு நகரங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல துவங்கியுள்ளனர். இந்த நிலையில், நாமக்கல் வழியாக கூடுதல் சம்மர் ஸ்பெஷல் சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.
சேலம் - காரைக்கால் - ராமேஸ்வரம், மதுரை - திருப்பதி - சென்னை, மைசூர் - கொல்லம் (நாமக்கல், கரூர், செங்கோட்டை வழியாக), கன்னியாகுமரி - டெல்லி (நாமக்கல் வழியாக), திருவனந்தபுரம் - சாலிமார் (மதுரை, நாமக்கல் வழியாக) சிறப்பு கோடைகால ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
இந்த ரயில்கள் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, மோகனூர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மிகுந்த நன்மை தரும். தற்போது நேரடி இணைப்புகள் குறைவாக உள்ள நிலையில், இவை ஒரு சிறந்த மாற்று வசதியாக அமையும். எனவே மத்திய ரயில்வே அமைச்சகம் உடனடியாக நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu