புதுச்சத்திரம் பகுதியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

புதுச்சத்திரம் பகுதியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் இளையதாண்டவ பூபதி, ஊர் பிரமுகர்கள் கவுதம், ஜெயபிரகாஷ், குமார், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தன. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, அந்தப் பள்ளியில் படிக்கும் 60 மாணவர்கள், 63 மாணவிகள் உள்ளிட்ட மொத்தம் 123 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் விழாவில் கலந்துகொண்டு 41 மாணவர்கள் மற்றும் 45 மாணவிகள் உள்ளிட்ட 86 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கவுதம், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராம்குமார், சுந்தரம், பாலு, பெற்றோர் ஆசிரியர்கள் கழகம் மற்றும் பள்ளி மோலண்மைக் குழு உறுப்பினர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story