நாமக்கல்லில் தனியார் பள்ளிகளின் இறுதி தேர்வு முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் பணி

நாமக்கல்லில் தனியார் பள்ளிகளின் இறுதி தேர்வு    முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் பணி
X

பைல் படம் 

நாமக்கல்லில், தனியார் பள்ளிகளுக்கான 2024-25 ஆண்டு இறுதி தேர்வு தேர்ச்சிக்கு ஒப்புதல் வழங்கும் பணி நடைபெற்றது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் சுயநிதி பள்ளிகள் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகளில் பயிலும் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின், முழு ஆண்டு பொது தேர்வு தேர்ச்சி விபரம் வெளியிட, மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதல் வழங்கும் பணி, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜோதி தலைமை வகித்தார்.

இந்த பணியில் தனியார் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தலைமையில், குழுவினர் பள்ளிகளின் தேர்ச்சி விவர பதிவேடுகளை முறையாக ஆய்வு செய்தபின்பு, அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கினார். இதன் அடிப்படையில் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் தங்களது பள்ளி 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, மாணவர்கள் தேர்ச்சி பெற்ற விவரத்தினை முறையாக தங்கள் பள்ளிகளில் வெளியிடுவார்கள்.

இந்த ஒப்புதல் வழங்கும் பணியில் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் விவேக் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story