தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு: ஜி.கே.வாசன் கவலை

நாமக்கல்லில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
நாமக்கல்,
தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் மற்றும் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன், எம்.பி., கவலை தெரிவித்தார்.
நாமக்கல்லைச் சேர்ந்த முன்னாள் நகராட்சித் தலைலவரும், தமாகா சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினருமான து.சு.மணியன் கடந்த மாதம் காலமாணார். இதையொட்டி அவரது வீட்டிற்கு வருகை தந்து, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஆளும் திமுக கட்சி, வாக்கு வங்கி அரசியல் செய்கிறது. இது மிகவும் வருத்தமான செயலாகும். மதுபானம், போதைப்பொருட்கள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.
முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், தமாகா கிழக்கு மாவட்ட தலைவர் இளங்கோ, மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், பொருளாளர் சுப்பிரமணியன், மாநகரத் தலைவர் சக்தி வெங்கடேஷ், சேலம் வக்கீல் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu