நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் தியாகிகள் தினம் அனுசரிப்பு

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் தியாகிகள் தினம் அனுசரிப்பு
X
நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் மகாத்மா காந்தி நினைவு நாள், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில், காந்தி நினைவு நாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் தியாகிகள் தினம் அனுசரிப்பு

நாமக்கல்,

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் மகாத்மா காந்தி நினைவு நாள், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில், நூலக வாசகர் வட்டம் மற்றும் நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை சார்பில் மகாத்மா காந்தி நினைவு நாள் மற்றும் தியாகிகள் தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நூலகர் செல்வம் வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். நூலகப் புரவலர் முகமது ரபி மகாத்மா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அனைவரும் தியாகிகள் தின உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் ஜவகர், கலைவாணன், நாராயணன், ராஜாமணி, ஆனந்தன், பாலாஜி, சங்கீதா, விஜயகுமார், ஆரம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மகாத்மா காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இறுதியில் வாசகர் வட்ட பொருளாளர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.

Tags

Next Story