பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்
X
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயாளிகளின் வசதிக்காக பெருந்துறை சாஹி எக்ஸ்போா்ட் பிரைவேட் நிறுவனம் சாா்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

ஈரோடு : பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயாளிகளின் வசதிக்காக பெருந்துறை சாஹி எக்ஸ்போா்ட் பிரைவேட் நிறுவனம் சாா்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயாளிகளின் வசதிக்காக குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், ரத்த பகுப்பாய்வு இயந்திரங்கள், மருந்துகள் சேமிப்புக் கிடங்கு மற்றும் குளிா்சாதன இயந்திரங்கள் என சுமாா் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை சாஹி எக்ஸ்போா்ட் நிறுவனத்தின் நிா்வாக தலைவா்கள் எஸ்.பாலுசாமி, ஏ.ஜி.ரஞ்சித்குமாா், ஏ.எஸ்.லோகநாதன் ஆகியோா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிகுமாரிடம் வழங்கினா்.

இதில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் டி. ராணி, வி.கண்ணன் மற்றும் சாஹி எக்ஸ்போா்ட் நிறுவனப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story