வைக்கோல் விலையின் அதிரடி சரிவு..!
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டத்தில் நெல் அறுவடை தொடங்கியதால், வெளிமாவட்ட வைக்கோல் விலை சரிந்து விற்பனை செய்யப்பட்டது.தஞ்சாவூர், கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகம் நடக்கிறது. இயந்திரத்தில் கட்டப்பட்ட வைக்கோல் சுமையை லாரியில் கொண்டு வந்து, சேலம், நாமக்கல் மாவட்ட பகுதிகளில், ஒரு சுமை, 320 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
கோடையில் கால்நடைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், விவசாயிகள் வைக்கோலை அதிகம் வாங்கி சேமித்து வைக்கின்றனர். முக்கியமாக ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கோல் விற்பனை அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பின் ராசிபுரம், சேந்தமங்கலம் பகுதியில் நெல் அறுவடை தொடங்கிவிட்டது. உள்ளூர் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வைக்கோலை, அருகில் உள்ள விவசாயிகளிடமே வாங்கி வைத்துக்கொண்டனர்.
இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வைக்கோல் விலை குறைந்து 320 ரூபாய்க்கு விற்ற வைக்கோல் சுமை தற்போது, 220 ரூபாய் முதல் 260 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வைக்கோல் வியாபாரிகள் தெரிவித்தனர்.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu