ஈரோடு இடைத்தேர்தல் : தி.மு.க. செயல்பாட்டு கூட்டம், 6 அமைச்சர்கள் பங்கேற்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. பிரசாரம், வாக்காளர் சந்திப்பு மற்றும் ஓட்டுகளை அதிகரிப்பது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, நேரு, வேலு, செந்தில்பாலாஜி, சாமிநாதன், நாசர், தி.மு.க. தலைமை இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை மற்றும் கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியில் உள்ள முக்கிய உள்ளூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பிப்ரவரி 5-ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 3 மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளது. பிரசாரத்துக்கு ஐந்து நாட்களும், பிற பணிகளுக்கு ஆறு நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளதால், வாக்காளர்களை நெருக்கமாக சந்தித்து ஓட்டுக்களை பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.
அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிடாத நிலையில், பா.ம.க., நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம், தி.மு.க. கூட்டணியில் இல்லாத சிறுபான்மையினர் அமைப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், கடந்த 2023 தேர்தலில் பதிவான ஓட்டுகளும், தி.மு.க. பெற்ற ஓட்டுகளும் குறையாமல் பெற தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் யோசனைகள் பகிரப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu