Namakkal News-இணையவழி பட்டா பணிகள்: ஆட்சியர் ஆய்வு ..!

namakkal news-நாமக்கல் கலெக்டர் உமா.(கோப்பு படம்)
Namakkal News
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்தில் நாச்சிபுதூர் காலனியில் இணையவழி பட்டா வரைமுறைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
Namakkal News
சேந்தமங்கலம் வட்டம் உத்திரகிடி காவல் ஊராட்சி, நாச்சிபுதூர் காலனியில் இணையவழி பட்டா வழங்குவதற்காக வரைமுறைப்படுத்தும் பணிகள் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
Namakkal News
முன்னதாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.
Namakkal News
இந்த ஆய்வில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) மகிழ்நன், தாசில்தார் (தேர்தல்கள்) திருமுருகன், ராசிபுரம் தாசில்தார் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Namakkal News
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, வட்டூர் ஊராட்சி அழகு நாச்சியம்மன் கோவில் வளாகத்தில் வருவாய் துறை சார்பாக வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
Namakkal News
இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu