மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சி துறையின் பரிசு மழை

மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சி துறையின் பரிசு மழை
ஈரோட்டில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை சார்பில், செம்மொழி நாள் விழாவுக்கான பள்ளி நிலை போட்டிகள் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றன. இதில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான தமிழ் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை ஒருங்கிணைத்தவர் முனைவர் சிவகாமி மற்றும் உதவி அலுவலர் வெண்ணிலா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
கட்டுரை போட்டியில்,
சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் மகளிர் பள்ளி மாணவி வெ.மோனிஷா,
நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி மாணவி க.மேகவர்ஷினி,
ஈரோடு முருகேசனார் செங்குந்தர் மகளிர் பள்ளி மாணவி மு.அனிஷாபானு ஆகியோர் முதலாவது முதல் மூன்றாவது இடங்களைப் பெற்றனர்.
பேச்சுப் போட்டியில்,
திண்டல் வேளாளர் மெட்ரிக் பள்ளி மாணவி அ.பஹ்மிதா தஸ்னீம்,
தாசப்பகவுண்டன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ரா.பிரேம்குமார்,
கருங்கல்பாளையம் அல் அமீன் பள்ளி மாணவி அ.சனாபாத்திமா ஆகியோர் வெற்றியாளர்களாக தேர்வாகினர்.
இவ்வாறு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு முறையே ₹10,000, ₹7,000 மற்றும் ₹5,000 பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. தமிழ்மொழி மேம்பாட்டிற்காக மாணவர்கள் எடுக்கும் பங்களிப்பு பாராட்டத் தக்கதாக அமைந்தது.
இதே போன்று, கல்லூரி மாணவ, மாணவியருக்கான போட்டி இன்று காலை 9:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu