மேம்பாலப்பணிக்காக சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்ட போக்குவரத்து மாற்றம்
X
குமாரபாளையம் மேம்பாலம் கட்டுமான பணிக்காக நேற்று முதல் இருபுறமும் சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
By - K.S.Balakumaran, Reporter |7 Dec 2023 5:30 PM IST
குமாரபாளையத்தில் மேம்பாலப்பணிக்காக சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
- குமாரபாளையத்தில் மேம்பாலப்பணிக்காக சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால், அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. பொதுமக்கள் போராட்டத்தையடுத்து அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது. அதே போல் அதிக மக்கள்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சாலையை கடக்கும் பகுதியாக கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதி மாறியுள்ளது.
- தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த பகுதியில்தான் சாலையை கடந்து வருகிறார்கள். இந்த இடத்தின் அத்தியாவசியம் கருதி உடனே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில், பல ஆண்டுகளுக்கு பின் மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருவதால், சர்வீஸ் சாலையில் டீ கடை, டிபன் கடை, கருப்பு சாறு கடை, சில்லி சிக்கன் கடை என்பது உள்ளிட்ட பல்வேறு கடைகள் உருவாகி வருகிறது. சர்வீஸ் சாலையோரம் வெறுமனே இருந்த இடத்தில் தற்போது பொக்லின் மூலம் மண் கொட்டப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. பாலம் கட்டுமான பணிக்காக நேற்று முதல் இருபுறமும் சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது என்பதை குறிக்கும் வகையில் விழிப்புணர்வு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu