குமாரபாளையத்தில் நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

குமாரபாளையம் வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பாக நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Namakkal Kavignar Ramalingam -குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Namakkal Kavignar Ramalingam -குமாரபாளையம் வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பாக விடியல் பிரகாஷ் தலைமையில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு வினாடி வினா மற்றும் கவிதை போட்டி வைக்கப்பட்டு பரிசாக புத்தகங்களை தலைமை ஆசிரியை செல்வி வழங்கினார்.

ஆசிரியர் குமார், இசையமைப்பாளர் மணி கிருஷ்ணா உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. குழு தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை செல்வி கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்

காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு மாணவர்களின் கற்றல் அடைவு குறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்க பெற்றோர் கூட்டம் நடத்துவது, பள்ளிக்கு நீண்ட நாட்களாக வருகை தராத மாணவர்கள் இடை நின்ற மாணவர்கள் ஆகியோர்களின் பெற்றோர்களை நேரில் சந்தித்து பேசி மீண்டும் பள்ளியில் சேர்ப்பது. மாணவர்களின் வருகை சதவீதத்தை உயர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்வது, 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு இயக்கம் தொடங்க உள்ளதை பொதுமக்களுக்கு தெரிவித்தல். மாணவர்கள் பள்ளிக்கு வரும் வழியில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி இதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆகியோரை கேட்டுக் கொள்வது, உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.விடியல் ஆரம்பம் தலைவர் பிரகாஷ் பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்தும் இல்லந்தேடி கல்வி அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.ஒன்றிய கவுன்சிலர் மணி செல்வம், தட்டாங்குட்டை உறுப்பினர் நாகராஜ் மற்றும் உறுப்பினர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் அமைப்பினர் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

குமாரபாளையத்தில் பிரகாஷ் தலைமையிலான விடியல் ஆரம்பம் அமைப்பினர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மகாத்மா காந்தி, நேரு, காமராஜ், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., பாலகங்காதரதிலகர், சர்தார் வல்லபாய் படேல், சுபாஷ் சந்திர போஸ், தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள், ஜான்சிராணி, வேலு நாச்சியார் உள்ளிட்ட பல சுதந்திர போராட்ட தியாகிகள், பிறந்த நாளில் அவர்களது திருவுருவச்சிலைகள், மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள அவர்களது திருவுருவப்படங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.

மேலும் அவர்கள் செய்த தியாகங்கள் குறித்து பேச்சு, கட்டுரை, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளாக பொருட்கள் வழங்காமல் புத்தங்கங்கள் வழங்கி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் ஆண்டுதோறும் நோட்டுகள், கல்வி உபகரணங்கள், கல்வி உதவித்தொகைகள், சீருடைகள் வழங்கியும் வருகிறார்கள். கொரோனா காலத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் 8 மாதங்களுக்கு தலா 300 நபர்களுக்கு உணவு வழங்கி வந்தனர். இதனை செயல்படுத்தி வரும் விடியல் பிரகாஷ் எதிர்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். சமீபத்தில் ஸ்டாலின் குணசேகரன் தலைமையிலான மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற 18ம் ஆண்டு புத்தக கண்காட்சிக்கு அரசு பள்ளி மாணவர்களை அழைத்து சென்று புத்தங்கள் வாங்கி கொடுத்து உதவினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா