மழைக்காலங்களில் ஏற்படுகின்ற மின்வெட்டுக்களை தவிர்க்க முற்றுப்புள்ளி

மழையில் மின்தடை தவிர்க்க பராமரிப்பு
வாழப்பாடி: வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 11-ம் தேதி மழையால் 6 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து, 14-ம் தேதி 4 மணி நேரமும், 18-ம் தேதி ஒரு மணி நேரமும் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் 19-ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து மழையின்போது மின்தடையைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாழப்பாடி மற்றும் பேளூர் பகுதிகளில் நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மின்கம்பிகள் மீதுள்ள மரக்கிளைகளை அகற்றும் பணியில் மின்வாரியப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்தப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, குறிப்பிட்ட பகுதிகளில் 2:30 மணி நேரம் திட்டமிட்ட மின்தடை ஏற்பட்டது. மின்வாரியத்தின் இம்முயற்சியால் வரும் மழைக்காலத்தில் திடீர் மின்தடைகள் குறைய வாய்ப்புள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu