கட்டிட தொழிலாளியை கம்பியால் தாங்கியவர் கைது

கட்டிட தொழிலாளியை கம்பியால் தாங்கியவர் கைது
X
வீட்டு வாசலில் கட்டுமான பொருட்கள் கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கம்பியால் தாக்கப்பட்டார்

தொழிலாளியை தாக்கியவருக்கு 'காப்பு'

ஆத்தூர்: ஆத்தூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சரவணன் (32), நேற்று முன்தினம் வேலு என்பவரது வீட்டுக்கு கட்டுமான வேலைக்குச் சென்றார். அப்போது, மந்தைவெளியைச் சேர்ந்த மாணிக்கம் (37), அவரது வீட்டு முன் கட்டுமானப் பொருட்களைக் கொட்டக்கூடாது எனத் தெரிவித்தார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த மாணிக்கம், இரும்புக் கம்பியால் சரவணனைத் தாக்கினார். காயமடைந்த சரவணன், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆத்தூர் டவுன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியான மாணிக்கத்தைக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags

Next Story