மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை ஏமாற்றி விற்ற நபர் மீது போலீசில் புகார்
மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை ஏமாற்றி விற்ற நபர் மீது போலீசில் புகார்
குமாரபாளையம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை ஏமாற்றி விற்ற நபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், 33. இவரது தந்தை வேலுமணி, 52. வேலுமணியிடம், லாரி விற்பனை புரோக்கர்களான முருகேசன், சுப்ரமணி ஆகியோர், லாரி ஒன்று விற்பனைக்கு உள்ளது என்று கூறியுள்ளனர். கொங்கனாபுரம் வழியில் ஒருக்காமலை பகுதியில் உள்ள ஒரு லாரி பட்டறையில், எடப்பாடி அருகே கட்சுப்பள்ளி பகுதியை சேர்ந்த செல்லப்பன் என்பவருக்கு சொந்தமான லாரியை காட்டியுள்ளனர். இந்த லாரியை 18 லட்சத்து 25 ஆயிரம் விலை பேசினர். நிதி நிறுவனத்தில் உள்ள கடன் தொகை 13 லட்சம் போக, 5 லட்சத்து 25 ஆயிரம் உரிமையாளர் வசம் ஒப்படைந்தனர். இந்த லாரி மணல் கடத்தலில் ஈடுபட்டதாகவும், நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டியும், நீதிமன்றம் சார்பில் கூறியதன் பேரில் இந்த லாரியை சிவகுமார் தரப்பினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த லாரி மீது மணல் கடத்தல் வழக்கு உள்ளது என்பதை மறைத்து, லாரியை விற்பனை செய்த செல்லப்பன் மீது, சிவக்குமார், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதன்படி குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu