மழையால் தணிந்த வெப்பம்! பொதுமக்கள் மகிழ்ச்சி!

மழையால் தணிந்த வெப்பம்!   பொதுமக்கள் மகிழ்ச்சி!
X

படவிளக்கம் : குமாரபாளையத்தில் நேற்று கன மழை பெய்தது.

குமாரபாளையத்தில் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

மழையால் தணிந்த வெப்பம் பொதுமக்கள் மகிழ்ச்சி

குமாரபாளையத்தில் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

குமாரபாளையத்தில் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

குமாரபாளையத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அடிக்கடி ஏற்படும் மின்தடையால், கோடை வெப்பம் தாங்காமல் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பலரும் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை 04:30 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணிநேரம் நீடித்தது.

சேலம் சாலை, இடைப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பஸ் ஸ்டாண்ட் அருகே கோம்பு பள்ளத்தில் அதிக நீர் ஓடியது. தீபாவளி சமயத்தில் துணிக்கடை, நகைக்கடைகளில் வியாபாரம் களை கட்டிய நேரத்தில் மழை வந்ததால், வியாபாரம் பாதித்தது. சாலையோர வியாபாரிகள் கடும் இடைஞ்சலுக்கு ஆளாகினர்.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்றுமுன்தினம் காலை முதலே மழை மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது. பெரும்பாலும் இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் தொடங்கிய கன மழை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சாலையில் மற்றும் கோம்பு பள்ளத்தில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று இரவில் மழை பெய்தது.

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை