குமாரபாளையத்தில் 2 மணி நேரம் கன மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

குமாரபாளையத்தில் 2 மணி நேரம் கன  மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X
குமாரபாளையத்தில் 2 மணி நேர கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வரவே அஞ்சும் நிலை குமாரபாளையத்தில் இருந்து வந்தது. சாலையோர வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் என பலதரப்பட்ட மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் மாலை 4: மணியளவில் குளிர் காற்றுடன் கன மழை பெய்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் கடும் வெப்பம் தணிந்து, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.



Tags

Next Story