/* */

நாகையில் படகில் கடத்த முயன்ற கஞ்சா,வாகனங்களுடன் பறிமுதல்

நாகையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற கஞ்சா மூட்டைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

நாகையில் படகில் கடத்த முயன்ற கஞ்சா,வாகனங்களுடன்  பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளுடன் சுங்க இலாகா அதிகாரிகள் உள்ளனர்.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்பட இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்கத் துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நாகை துறைமுகம், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து மேற்கொண்டனர். அப்போது நாகை துறைமுகம் அருகே ஒரு படகில் கஞ்சா மூட்டைகள் ஏற்றிக்கொண்டு இருந்ததை கண்டு அங்கு சுங்கத்துறை அதிகாரிகள் விரைந்தனர்.


சுங்கத்துறை அதிகாரிகள் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் கஞ்சாவை படகுடன் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து படகைச் சுற்றி வளைத்து சுங்க அதிகாரிகள் படகில் 10 மூட்டைகளில் இருந்த 280 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற 4, இருசக்கர வாகனம் இரண்டு வலைகள் ஒரு ஐஸ் பெட்டி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தப்பிச்சென்ற கடத்தல்காரர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கடத்தப்படவிருந்த கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்றும் இந்த கஞ்சா பொட்டலங்கள் அனைத்தும் இலங்கைக்கு படகு மூலம் கடத்தவிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

Updated On: 27 Sep 2021 3:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்