/* */

நாகையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு கூட்டம்

நாகையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

HIGHLIGHTS

நாகையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு கூட்டம்
X

நாகையில் அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் காமராஜ், ஆணையர் மதிவாணன், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை அதிகாரிகள் மற்றும் கலந்துகொண்டனர்.

மேலும் பள்ளி கல்லூரி மாணவர் தங்கும் விடுதிகளில் தேவைகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அதனை தொடர்ந்து தையல் இயந்திரம், சலவைப் பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கிவரும் மாணவர்விடுதிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பழுதடைந்த மாணவர் விடுதிகளை சீரமைக்க நடப்பாண்டில் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், பழுதடைந்து பயன்பாடு இன்றி உள்ள பழைய கட்டிடங்கள் மாணவர்கள் பாதிக்காத வகையில் இடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விடுதிகளில் உள்ள தேவைகள் குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு அந்த தேவைகளை நிறைவேற்றித் தரப்படும் எனவும், பிற்பட்டோருக்கு வழங்கப்படும் பொருளாதார மேம்பாட்டு கடன்கள் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Updated On: 21 Dec 2021 3:41 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மாமியார் கதையை முடித்த மருமகள், ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
  2. நாமக்கல்
    அரசு விதிமுறைகளை மீறி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : அதிகாரி...
  3. திருவண்ணாமலை
    கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி: அறங்காவலர் குழுவினருக்கு...
  4. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  9. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  10. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!