/* */

கொரோனா விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம்

நாகப்பட்டினத்தில் கொரோனா தொற்றைத் தடுக்க மாஸ்க் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்களுக்கும் அபராதம் விதித்து நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதை அடுத்து பொதுமக்கள் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து செயல்பட வேண்டும் எனவும், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் தலைமையில் நாகப்பட்டினம், நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினர்.

இதில் நாகூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் நாகூர் கடைவீதியில் உள்ள ஹோட்டல்கள், கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிந்து உள்ளார்களா என்பதை நகராட்சி ஆணையர் ஏகராஜ் ஆய்வு செய்தார். அப்போது மாஸ்க் அணியாத நபர்களுக்கு 200 ரூபாய் அபராதமும், சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்களுக்கு 500 ரூபாய் அபராதமும் அவர் வசூலித்தார்.

மேலும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தியதாகவும், கடைக்கு உரிமம் புதுப்பிக்காமல் வைத்திருந்ததாக 2 கடை உரிமையாளருக்கு ரூ. 5,000 அபராதம் விதித்தார். இதேபோல் அரசுப் பேருந்துகளில் பயணிகள் மாஸ்க் அணிந்துள்ளார்களா என்பதையும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Updated On: 22 April 2021 9:37 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சூலூர் அருகே 2.2 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. தமிழ்நாடு
    துன்பத்தில் ஒரு மகிழ்ச்சி : விழுப்புரத்தில் ஒரு சோக கதை..!
  3. லைஃப்ஸ்டைல்
    பரோட்டா பிரியரா நீங்க? - இந்த உண்மைகள் தெரிஞ்சா பரோட்டா பக்கமே போக...
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் EV சார்ஜிங் நிலையம் அறிமுக நிகழ்ச்சி || #ev...
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் அடிக்கடி முகம் கழுவுபவரா நீங்க...?
  6. சினிமா
    தனியா உக்காந்து பாத்துடாதீங்க..! அப்றம் பயந்து போயிடுவீங்க..!
  7. வீடியோ
    எனக்கு இப்படி ஒரு படம் கெடச்சது சந்தோசம் Vani Bhojan ! |#anjaamai...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையாரை தரிசனம் செய்த அண்ணாமலை
  9. வீடியோ
    Garudan Movie-ய Friends எல்லாம் சேந்து பாக்கலாம் !! #garudan #soori...
  10. விளையாட்டு
    இந்தியா - வங்கதேசம் லைவ் மேட்ச் எங்க பாக்கலாம்?