/* */

நாகை மாவட்டத்தில் 6 பள்ளி வாகனங்களை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை

பள்ளிகள் திறக்கப்பட இருப்பதையொட்டி நடந்த ஆய்வில் நாகையில் 6 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாகை மாவட்டத்தில் 6 பள்ளி வாகனங்களை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை
X
நாகையில் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன் ஆய்வு செய்தார்.

நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதிலுமுள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்று நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளை சேர்ந்த 45 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் நாகை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன் மற்றும வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் பள்ளி வாகனங்களில் முறையானஆவணங்கள் உள்ளதா என்றும், முதலுதவி பெட்டிகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தனர்.

மேலும் பள்ளி வாகனத்தின் உள்ளே சென்று ஆய்வு செய்த வருவாய் கோட்டாட்சியர் வாகனம் நோய்த் தொற்று ஏற்படாதவாறு சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யப் பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வாகன காப்புரிமை மற்றும் பதிவுச் சான்றிதழ் இல்லாத 6 வாகனங்களை தகுதி நீக்கம் செய்தும் அவர் உத்தரவிட்டார். மேலும் தணிக்கை செய்யப்படாத பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Updated On: 13 Oct 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?