மதுரையில் கார் மோதி இருவர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை..
![Madurai Accident News Today Madurai Accident News Today](https://www.nativenews.in/h-upload/2023/02/18/1663219-caraccident1.webp)
Madurai Accident News Today
Madurai Accident News Today-மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள புட்டு தோப்பு பகுதியில் அதி வேகமாக சென்ற நான்கு சக்கர வாகனம் அடுத்தடுத்து நான்கு பேரை மோதி விபத்திற்குள்ளானது. இதில், அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த கருப்பையா தோப்பு பகுதியை சேர்ந்த சுப்பு லட்சுமி,(வயது 60)., மற்றும் அவரது பேரன் தானு ஆகாஷ்,(வயது 13) ஆகியோரின் மீது தறிகெட்ட நிலையில் வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்ற இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்தில் பலியான சுப்புலட்சுமி மற்றும் தாணு ஆகாஷ் ஆகியோரது உடலை கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (வயது 43). என்பது தெரிய வந்தது. எனவே, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. மேலும், அவரது வாகனத்தில் சட்ட விரோதமாக பம்பர் பொறுத்து இருந்ததும், விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
எனவே, போக்குவரத்து போலீசார் மதுஅருந்திவிட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக முருகனை கைது செய்து, அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மதுரை மாநகர பகுதிகளில் ஏற்பட்ட சாலை விபத்தில் சுமார் எட்டுக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu